விளையாட்டு

இந்தியா திரும்ப வாய்ப்பிருந்தும் அணியோடு இருக்க விரும்புவதாக சிராஜ் சொல்லிவிட்டார்-பிசிசிஐ

இந்தியா திரும்ப வாய்ப்பிருந்தும் அணியோடு இருக்க விரும்புவதாக சிராஜ் சொல்லிவிட்டார்-பிசிசிஐ

EllusamyKarthik

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜின் தந்தை முகமது கவுஸ் (53 வயது) நுரையீரல் நோய் காரணமாக வெள்ளி அன்று (20.11.2020) காலமானார். தற்போது ஆஸ்திரேலியாவுக்கு பயணமாகியுள்ள இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார் சிராஜ். தந்தையின் மறைவு செய்தியை கேட்டு இடிந்து போயுள்ளார் அவர்.

இந்நிலையில் தந்தையை இழந்த சிராஜ் இந்தியா திரும்ப வாய்ப்பிருந்தும் அணியோடு இருக்க விரும்புவதாக சொல்லிவிட்டார் என பிசிசிஐ அறிக்கை வெளியிட்டுள்ளது.

“சிராஜின் தந்தை காலமானதும் நாங்கள் அவருடன் கலந்து ஆலோசித்தோம். அப்போது இந்த துயரமான நேரத்தில் அவர் இந்தியா திரும்பவும், குடும்பத்தோடு இருக்கவும் வாய்ப்பு கொடுத்தோம். ஆனால் அவர் இந்திய அணியோடு இருக்க விரும்புவதாகவும், தனது நாட்டுக்காக விளையாட விரும்புவதாகவும் சொல்லிவிட்டார்” என பிசிசிஐ தெரிவித்துள்ளது.


அண்மையில் முடிந்த ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்காக விளையாடிய சிராஜ் 9 ஆட்டங்களில் 11 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது ஆஸ்திரேலியாவில் இந்திய அணி கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

விவரங்களுக்கு : http://www.puthiyathalaimurai.com/newsview/86898/Cricketer-Mohammed-Siraj-to-miss-father-s-funeral-due-to-quarantine-rules