விளையாட்டு

"பும்ரா முன்னேறி வந்தாலும் என்னைப் பொறுத்தவரை ஷமிதான்" - அஜித் அகர்கர்

jagadeesh

பும்ரா வேகமாக முன்னேறி வந்தாலும் முகமது ஷமிதான் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் நம்பர் ஒன் பவுலர் என்று முன்னாள் வீரர் அஜித் அகர்கர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசிய அஜித் அகர்கர்"இந்திய டெஸ்ட் அணிக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி. பும்ரா வேகமாக வளர்ந்து வந்தாலும் என்னைப் பொறுத்தவரை முகமது ஷமிதான் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் நம்பர் ஒன் வேகப்பந்துவீச்சாளர். உலகின் எந்தவொரு நாட்டிலும் விக்கெட் எடுக்க கூடிய ஆற்றல் படைத்தவர் ஷமி மட்டுமே" என்றார்.

மேலும் பேசிய அஜித் அகர்கர் "உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை வெல்லப்போவது யார் என கணிப்பது கடினம். ஆனால் என்னை பொறுத்தவரை நியூசிலாந்துக்கு வெற்றி வாய்ப்பு இருக்கிறது. இந்தப் போட்டியில் விராட் கோலி அதிக ரன்களை குவிப்பார். ஏனென்றால் ஏற்கெனவே இங்கிலாந்தில் அந்த அணிக்கு எதிராகவே சிறப்பாக விளையாடி இருக்கிறார், சாதித்து இருக்கிறார். இங்கிலாந்தின் சீதோஷனமும் கோலிக்கு பழக்கமானது" என்றார் அவர்.

இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இங்கிலாத்தின் சவுத்தாம்டன் நகரில் ஜூன் 18 முதல் 22 தேதி வரை நடக்கிறது. இதற்காக மும்பையில் இருந்து தனி விமானம் மூலம் இங்கிலாந்து சென்ற இந்திய அணியினர் பயோ பபுள் விதிமுறையின் கீழ் தங்களை தனிமைப்படுத்தி கொண்டுள்ளனர்.