விளையாட்டு

செஸ் இஸ்லாத்துக்கு எதிரானதா? முகமது கைஃப் கேள்வி

செஸ் இஸ்லாத்துக்கு எதிரானதா? முகமது கைஃப் கேள்வி

webteam

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முகமது கைஃப். இவர் சமூக வலைத்தளத்தில் தனது மகனுடன் செஸ் விளையாடுவது போன்று ஒரு புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். இதைக் கண்ட ரசிகர்கள் சிலர், செஸ் விளையாடுவது இஸ்லாத்துக்கு எதிரானது என்று கண்டனம் தெரிவித்திருந்தனர்.

செஸ், இஸ்லாத்தில் தடை செய்யப்பட்ட ஒன்று என்றும் இந்த விளையாட்டு ஹராம் என்றும் சிலர் கூறியுள்ளனர். இதையடுத்து பலர் கைஃபுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். சிலர் ஆதரித்து கருத்து தெரிவித்தனர். இதையடுத்து சமூக வலைத்தளங்களில் இந்த விவகாரம் பரபரப்பானது. 

இதையடுத்து கடுப்பான முகமது கைஃப், ’எதிரானதா? மூச்சுவிடறது எதிரானதா இல்லையான்னு கேட்டுச் சொல்லுங்க?’ என்று கூறியுள்ளார்.
ஏற்கனவே சூரிய நமஸ்காரம் செய்வது போன்ற படங்களை வெளியிட்டு, இது நல்லது என்று கூறியிருந்தார் முகமது கைஃப். இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த அவர் சூர்ய நம்ஸ்காரம் செய்வது இஸ்லாதுக்கு எதிரானது எனக் கூறி பலர் எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இப்போதும் சமூக வலைத்தளங்களில் அவருக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.