ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் புனே அணியின் கேப்டன் பதவியில் இருந்து மகேந்திர சிங் தோனி நீக்கப்பட்டது தவறான முடிவு என முன்னாள் வீரர் முகமது அசாருதீன் தெரிவித்துள்ளார்.
கேப்டன் பொறுப்பிலிருந்து தோனியை நீக்குவதாகவும் அவருக்கு பதிலாக ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் ஸ்மித் புனே அணியை வழிநடத்துவார் எனவும் புனே அணி நிர்வாகம் அறிவித்தது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முகமது அசாருதீன், கடந்த சீசனில் புனே அணியின் மோசமான செயல்பாட்டிற்கு தோனியை மட்டுமே காரணமாகக் கூறுவது ஏற்புடையதல்ல என்றும், சர்வதேச கிரிக்கெட்டில் அவர் வியத்தகு சாதனைகளை நிகழ்த்தி இருப்பதாகவும் கூறியுள்ளார்.