விளையாட்டு

விக்கெட்டுகளை இழந்தும் தடுமாறும் இந்திய அணி

webteam

சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப் போட்டியின் முதல் 3 ஓவர்களிலேயே ரோகித் ஷர்மா மற்றும் விராத் கோலி ஆகியோரின் விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறி வருகிறது.

முகமது ஆமீர் வீசிய முதல் ஓவரின் மூன்றாவது பந்தில் ரன் எதுவும் எடுக்காத நிலையில் ரோகித் ஷர்மா எல்பிடபிள்யு முறையில் ஆட்டமிழந்தார். அமீர் வீசிய 3ஆவது ஓவரில் ஸ்லிப் கேட்ச் கண்டத்தில் இருந்து தப்பிய விராத் கோலி, அடுத்த பந்திலேயே கல்லியில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 9 பந்துகளை சந்தித்த அவர் 5 ரன்களில் ஆட்டமிழந்தார். பாகிஸ்தான் அணி நிர்ணயித்த 339 என்ற இமாலய இலக்கினை நோக்கி இந்திய அணி விளையாடி வருகிறது. மூன்று ஓவர்கள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 7 ரன்கள் எடுத்துள்ளது. ஷிகர் தவான் மற்றும் யுவராஜ் சிங் ஆகியோர் தலா ஒரு ரன்னுடன் களத்தில் உள்ளனர். சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணி விளையாடுவது இதுவே முதல் முறையாகும். இந்திய அணிக்கெதிரான சர்வதேச ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி குவித்த அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.