விளையாட்டு

உலகின் மிகச்சிறந்த பேட்ஸ்மேன் விராத் கோலிதான்: பாக். வீரர் முகமது அமீர் புகழாரம்

உலகின் மிகச்சிறந்த பேட்ஸ்மேன் விராத் கோலிதான்: பாக். வீரர் முகமது அமீர் புகழாரம்

webteam

உலகின் மிகச்சிறந்த பேட்ஸ்மேன் இந்திய அணியின் கேப்டன் விராத் கோலிதான் என்று பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீர் புகழாரம் சூட்டியுள்ளார். 

சமூக வலைதளமான ட்விட்டரில் ரசிகர் ஒருவரின் கேள்விக்குப் பதிலளித்த அமீர் இவ்வாறு தெரிவித்தார். மேலும், பாகிஸ்தான் அணியில் தனது பேவரைட் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக் என்றும் அவர் தெரிவித்தார். முதல் சாம்பியன்ஸ் கோப்பையில் சச்சினின் விக்கெட்டைக் கைப்பற்றியது அல்லது சமீபத்திய சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப் போட்டியில் விராத் கோலியின் விக்கெட்டைக் கைப்பற்றியது. இவற்றில் நீங்கள் அதிகம் ரசித்த நிகழ்வு எது என்று அமீரிடம் ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அந்த இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்திய தருணங்களையும் அதிகம் கொண்டாடியதாக அமீர் தெரிவித்தார். அதேபோல, கிரிக்கெட் தவிர கால்பந்து விளையாட்டிலும் தமக்கு ஈடுபாடு உள்ளதாக அமீர் கூறியுள்ளார். இங்கிலாந்தில் நடந்த சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி பாகிஸ்தான் அணி முதல் முறையாக கோப்பை வென்றது. இறுதிப் போட்டியில் ரோகித் ஷர்மா, விராத் கோலி உள்ளிட்ட 3 விக்கெட்டுகளை வீழ்த்தி பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு முகமது அமீர் முக்கிய பங்கு வகித்தார்.