விளையாட்டு

‘உசேன் போல்ட் தடகளத்தின் முகமது அலி’

‘உசேன் போல்ட் தடகளத்தின் முகமது அலி’

webteam

ஜமைக்காவைச் சேர்ந்த உசேன் போல்ட் உலகின் தலைசிறந்த தடகள வீரர் எனவும் அவர் தடகளத்தின் முகமது அலி என்றும் சர்வதேச தடகள சம்மேளனத்தின் தலைவர் செபாஸ்டியன் கோ புகழாரம் சூட்டியுள்ளார்.

லண்டனில் செய்தியாளர்களிடம் பேசிய செபாஸ்டியன் கோ, குத்துச்சண்டை ஜாம்பவான் முகமது அலியுடன், உசேன் போல்ட்டை ஒப்பிட்டுப் பேசினார். ஓய்வுக்குப் பிறகு தடகள சம்மேளனத்தின் வளர்ச்சியில் உசேன் போல்ட் முக்கியப் பங்கு வகிப்பார் என நம்புவதாக அவர் தெரிவித்தார்.

ஒலிம்பிக்கில் 8 தங்கப்பதக்கங்களை வென்றுள்ள தடகள வீரர் உசேன் போல்ட், லண்டனில் இந்த வாரம் நடைபெறவுள்ள உலகச் சாம்பியன்ஷிப் போட்டியுடன் ஓய்வு பெறுகிறார். கடைசியாக 100 மீட்டர் ஓட்டப்பந்தயம் மற்றும் தொடர் ஓட்டத்தில் அவர் பங்கேற்கிறார்.