விளையாட்டு

ஒரு ரன்னில் சாதனையைத் தவறவிட்ட மிதாலி ராஜ்

ஒரு ரன்னில் சாதனையைத் தவறவிட்ட மிதாலி ராஜ்

webteam

மகளிர் உலகக் கோப்பை தொடரில் அதிக ரன்கள் குவித்த வீராங்கனை என்ற சாதனையை ஒரு ரன்னில் இந்திய அணியின் கேப்டன் மிதாலி ராஜ் தவறவிட்டார்.

இங்கிலாந்து அணிக்கெதிரான இறுதிப் போட்டியில் 31 பந்துகளில் 17 ரன்கள் குவித்த நிலையில், மிதாலி ராஜ் ரன் அவுட் ஆகி வெளியேறினார். இதன்மூலம் நடப்பு உலகக்கோப்பை தொடரில் மிதாலி குவித்த ரன்கள் எண்ணிக்கை 409 ஆனது. இந்தத் தொடரில் அதிக ரன்கள் குவித்த வீராங்கனைகள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் இங்கிலாந்து வீராங்கனை டேமி பீமாண்ட் (410 ரன்கள்) என்ற சாதனையை ஒரு ரன்னில் மிதாலி ராஜ் தவறவிட்டார். உலகக் கோப்பை தொடரில் 9 போட்டிகளில் பங்கேற்றுள்ள மிதாலி ராஜ், ஒரு சதம் மற்றும் 3 அரைசதங்களுடன் 409 ரன்கள் எடுத்துள்ளார். இந்த பட்டியலில் 404 ரன்களுடன் ஆஸ்திரேலிய வீராங்கனை எல்சி பெர்ரி மூன்றாம் இடத்தில் இருக்கிறார்.