மகளிர் ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான பேட்டிங் தரவரிசையில் இந்திய வீராங்கனை மிதாலி ராஜ் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.
ஆஸ்திரேலிய வீராங்கனை மெக் லானிங் காயம் காரணமாக இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் இருந்து விலகினார். இதனால் அவர் தரவரிசையில் முதலிடத்தில் இருந்து நான்காவது இடத்திற்கு பின்தங்கினார். இதனையடுத்து மிதாலி ராஜ் ஒரு இடம் முன்னேறி முதலிடத்தை பிடித்துள்ளார். இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டனான மிதாலி ராஜ், ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் அதிக ரன்களை எடுத்தவர் என்ற சாதனையை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஒருநாள் கிரிக்கெட்டில், அணிகளுக்கான தரவரிசையில் ஆஸ்திரேலிய அணி 129 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. இங்கிலாந்து அணி 127 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. இந்திய மகளிர் அணி 116 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் உள்ளது.