மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணிக் கேப்டன் மிதாலி ராஜ்க்கு ரயில்வே துறையில் பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி வீராங்கனைகளில் கேப்டன் மிதாலி ராஜ், துணை கேப்டன் ஹர்மான்பிரீத் கவுர் உள்ளிட்ட மொத்தம் 10 பேர் இந்தியன் ரயில்வேயில் ஊழியர்களாக உள்ளனர். உலக கோப்பையில் இவர்களது சிறப்பான செயல்பாட்டை கவுரவிக்கும் வகையில், பதவி உயர்வு வழங்கப்படுவதுடன் ரொக்கப் பரிசும் அளிக்கப்பட உள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு அறிவித்திருந்தார்.
இந்நிலையில், ஹைதராபாத்தை மையமாக கொண்ட தெற்கு மத்திய ரயில்வேயில் அலுவலக தலைமை கண்காணிப்பாளராக மிதாலிக்கு பதவி உயர்வு ரயில்வேத்துறை அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல், மற்ற வீராங்கனைகளுக்கும் விரைவில் பதவி உயர்வு அளிக்கப்படும் என ரயில்வேத்துறை அறிவித்துள்ளது.