விளையாட்டு

சேவாக் கருத்து,மித்தாலி ராஜ் ஆதரவு!

சேவாக் கருத்து,மித்தாலி ராஜ் ஆதரவு!

webteam

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தலைவர் மித்தாலிராஜ் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார்.

இந்திய மகளிருக்கான கிரிக்கெட் அணி தலைவர் மித்தாலிராஜ் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று அதிகாலை சுப்ரபாத சேவையில் சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு ரங்கநாதர் மண்டபத்தில் தேவஸ்தான அதிகாரிகள் தீர்த்த பிரசாதங்களை வழங்கினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மித்தாலிராஜ், ’மகளிர் கிரிக்கெட் அணிக்கு சுவாமியின் ஆசீர்வாதம் இருக்க வேண்டும் என வேண்டிகொண்டேன். டி.20 போட்டியை ஒலிம்பிக்கில் சேர்க்க வேண்டும் என்ற சேவாக் கருத்து வரவேற்கத்தக்கது. ஒலிம்பிக்கில் பல்வேறு போட்டிகள் உள்ளது. அனைவருக்கும் ஒலிம்பிக் பதக்கம் பெற வேண்டும் என்ற ஆசை உண்டு. இதுகுறித்து பி.சி.சி.ஐ. தான் முடிவு எடுக்க வேண்டும். அடுத்த ஆண்டு உலக கோப்பை டி.20 போட்டி உள்ளது. மிகவும் சவாலானது கடவுள் அருள் அனைவருக்கும் இருந்தாலும் கடின பயிற்சி  வேண்டும்’ என்றார்.