ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மிச்செல் ஸ்டார்க் முதல்தர கிரிக்கெட்டில் ஒரே போட்டியில் இரண்டு முறை ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.
நியூ சவுல் வேல்ஸ் அணிக்காக விளையாடி வரும் ஸ்டார்க், மேற்கு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் இந்தச் சாதனையை படைத்தார். முதல் இன்னிங்ஸில் அடுத்தடுத்த பந்துகளில் மூன்று பேரை வெளியேற்றிய ஸ்டார்க், இரண்டாவது இன்னிங்ஸிலும் அதே சாதனையை செய்தார். இத்தகைய சாதனையை சர்வதேச அளவில் ஓரேயொரு வீரர் மட்டும் நிகழ்த்தியுள்ளார். ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஜிம்மி மேத்யூஸ் 1912-ஆம் ஆண்டு நடைபெற்ற தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் இரட்டை ஹாட்ரிக் சாதனையை நிகழ்த்தியிருக்கிறார்.