விளையாட்டு

நீச்சல் மன்னனை வென்ற வெள்ளை சுறா

நீச்சல் மன்னனை வென்ற வெள்ளை சுறா

webteam

மைக்கேல் பெல்ப்ஸ் மற்றும் சுறாமீனுக்கு இடையே நடைபெற்ற நீச்சல் போட்டியில் சுறா மீன் வெற்றி பெற்றது. 

நீச்சல் மன்னல் மைக்கேல் பெல்ப்ஸ் மற்றும் சுறா மீன் இடையே நீச்சல் போட்டி நடத்தப்பட்டது.‌ கடலில் நடந்த100 மீட்டர் நீச்சலில் பந்தய இலக்கை முதலில் எட்டுவதில், சுறாவுக்கும், அமெரிக்காவின் மைக்கேல் பெல்ப்ஸ்-க்கும் கடும் போட்டி நிலவியது. வெள்ளை சுறா , 36.10 வினாடிகளில் இலக்கை எட்டியது. ஒலிம்பிக்கில் 28 பதக்கங்களை வென்றுள்ள பெல்ப்ஸ், 38.10 வினாடிகளில் பந்தய தூரத்தை ‌எட்டினார். மனிதர்களின் சராசரி நீச்சல் வேகம் மணிக்கு 8 முதல் 10 கிலோ மீட்டராக இருக்கிறது. ஆனால் வெள்ளை சு‌றா மீன்கள் மணிக்கு 40 கிலோ மீட்டர் வரை நீச்சல் ஆற்றல் பெற்றுள்ளது. சுறாவுடன் மீண்டும் போட்டியில் பங்கேற்று, அதனை வீழ்த்த தயாராக இருப்பதாக பெல்ப்ஸ் தெரிவித்துள்ளார்.