விளையாட்டு

ஹர்பஜன் சிங் கிண்டல்: கிளார்க் பதில்!

ஹர்பஜன் சிங் கிண்டல்: கிளார்க் பதில்!

webteam

முன்னணி பேட்ஸ்மேன்களை உருவாக்கும் ஆஸ்திரேலியாவின் சகாப்தம் முடிந்துவிட்டது என்று இந்திய கிரிக்கெட் அணியின் சுழல் பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் கிண்டலாக கூறியுள்ளார்.
இந்தியாவுக்கு எதிரான 3 வது ஒரு நாள் போட்டியிலும் ஆஸ்திரேலிய அணி தோல்வியை தழுவியது. இதையடுத்து இந்திய சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங், இந்தப் போட்டியை வர்ணனை செய்யும் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் கிளார்க்கு டேக் செய்து பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், ’மேட், உங்கள் ஓய்வு முடிவை மாற்றிவிட்டு, நீங்கள் மீண்டும் வந்து ஆட வேண்டும். டாப் பேட்ஸ்மேன்களை உருவாக்கும் ஆஸ்திரேலியாவின் சகாப்தம் முடிவுக்கு வந்துவிட்டது என்று நினைக்கிறேன்’ என்று கூறியிருந்தார். 

இதற்கு பதிலளித்துள்ள கிளார்க், ‘இப்போதுதான் இதை பார்த்தேன். எனது வயதான கால்கள் ஏசிப் பெட்டிக்குள் உட்கார்ந்துகொண்டு இனிமையாக வர்ணனை செய்து கொண்டிருக்கிறது’ என்று தெரிவித்துள்ளார்.