விளையாட்டு

விராத் கோலிக்கு ஆதரவு தெரிவித்த மைக்கேல் கிளார்க்

விராத் கோலிக்கு ஆதரவு தெரிவித்த மைக்கேல் கிளார்க்

webteam

ஆஸ்திரேலிய ஊடகங்கள் இந்திய அணியின் கேப்டன் விராத் கோலியின் புகழுக்குக் களங்கம் விளைவிக்க முயல்வதாக மைக்கேல் கிளார்க் தெரிவித்துள்ளார்.

விராத் கோலியை, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்புடன் ஒப்பிட்டு ஆஸ்திரேலியாவிலிருந்து வெளிவரும் டெய்லி டெலகிராப் பத்திரிகை செய்தி வெளியிட்டது. இதுபோன்ற செய்திகளை விராத் கோலி பெரிதுபடுத்தத் தேவையில்லை என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மேலும் பேசிய அவர், ஒரு சில பத்திரிகையாளர்கள் விராத் கோலியின் புகழுக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் செய்திகளை வெளியிட்டு வருகின்றனர். அவற்றை ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்மித்தே கண்டுகொள்ள மாட்டார் என்றும் கிளார்க் தெரிவித்தார். இரு அணிகளின் கேப்டன்களுமே தர்மசாலாவில் நடைபெறும் 4ஆவது டெஸ்ட் போட்டியை வெல்வதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் கிளார்க் அறிவுறுத்தினார்.