விளையாட்டு

MI VS RCB : சூரியகுமார் யாதவ் ‘ஒன் மேன் ஷோ’ - மும்பை வெற்றி!

EllusamyKarthik

அபுதாபியில் நடைபெற்ற நடப்பு ஐபிஎல் சீசனின் 48வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் விளையாடின. 

டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் பொல்லார்ட் பவுலிங் தேர்வு செய்தார்.

இதனையடுத்து பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்தது.

இருபது ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்களை எடுத்தது பெங்களூரு. 

தொடர்ந்து மும்பை அணி 165 ரன்களை விரட்டியது.

டி காக், இஷான் கிஷன், சவுரப் திவாரி, க்ருணால் பாண்டியா என மும்பை அணியின் பேட்ஸ்மேன்கள் சீரிய இடைவெளியில் விக்கெட்டை இழக்க மறுபக்கம் விளையாடிய சூரியகுமார் யாதவ் மட்டும் பெங்களூரு பவுலர்களின் பந்து வீச்சை பவுண்டரிகளுக்கு தெறிக்க விட்டார். 

43 பந்துகளில் 79 ரன்களை விளாசினார் அவர். அதில் 10 பவுண்டரிகளும், 3 சிக்ஸர்களும் அடங்கும்.

19.1 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்களை எடுத்து மும்பை 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.