விளையாட்டு

சென்னை அணியின் வெற்றி தொடருமா?- 156 ரன்கள் இலக்கு

சென்னை அணியின் வெற்றி தொடருமா?- 156 ரன்கள் இலக்கு

webteam

சென்னை அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் மும்பை அணி 155 ரன்கள் குவித்துள்ளது.

ஐபில் தொடரின் 44ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்ய மும்பை அணியில் ரோகித் சர்மா மற்றும் டி காக் களமிறங்கினர்.

ஆட்டத்தின் இரண்டாவது ஓவரில் டி காக் 9 பந்துகளில் 15 ரன்கள் எடுத்து தீபக் சஹார் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார். இதனையடுத்து களமிறங்கிய எல்வின் லூயிஸ் ரோகித் சர்மாவுடன் ஜோடி சேர்ந்தார். இவர்கள் இருவரும் இரண்டாவது விக்கெட்டிற்கு 75 ரன்கள் எடுத்தனர். எல்வின் லூயிஸ் 30 பந்துகளில் 32 ரன்கள் எடுத்திருந்த போது  சாண்டனர் சுழலில் வெளியேறினார். 

இதனைத் தொடர்ந்து களமிறங்கிய குர்ணல் பாண்ட்யா வெறும் ஒரு ரன்னில் வெளியேறினார். எனினும் மற்றொரு புறம் ரோகித் சர்மா தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். குறிப்பாக தாஹிர் வீசிய 16வது ஓவரில் ரோகித் சர்மா 2 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சர் விளாசினார். இதனால் மும்பை அணியின் ஸ்கோர் 16 ஒவர்களின் முடிவில் 121 ரன்களை எட்டியது. எனினும் ரோகித் சர்மா 17வது ஓவரில் 3 சிக்சர்கள் மற்றும் 6 பவுண்டரிகளின் உதவியுடன் 48 பந்துகளில் 67 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 

இறுதியில் மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு  155 ரன்கள் எடுத்தது. கடைசி ஐந்து ஓவரில் மும்பை அணி 50 ரன்கள் சேர்த்து. ஹர்திக் பாண்ட்யா 23 ரன்களுடனும் பொல்லார்டு 13 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். சென்னை அணி சார்பில் சிறப்பாக பந்துவீசிய சாண்ட்னர் 2விக்கெட் வீழ்த்தினார். அத்துடன் தீபக் சாஹர் மற்றும் தாஹிர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். சென்னை வெற்றிப் பெற  ரன்கள் இழக்காக நிர்ணயக்கப்பட்டுள்ளது.