நடப்பு ஐபிஎல் சீசனின் முதல் குவாலிபையர் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், டெல்லி கேபிடல்ஸ் அணியும் விளையாடுகின்றன.
டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
மும்பை அணிக்காக டி காக்கும், ரோகித்தும் இன்னிங்க்ஸை ஓப்பன் செய்தனர்.
அஷ்வின் வீசிய இரண்டாவது ஓவரின் மூன்றாவது பந்தை சந்தித்த ரோகித் டக் அவுட்டாகி வெளியேறினார். அது இந்த ஆட்டத்தில் ரோகித் சந்தித்த முதல் பந்தும் கூட.
லெக் ஸ்டம்ப் திசையில் வந்த குட் லென்த் டெலிவரியை மிஸ் செய்து LBW முறையில் அவுட்டானார் ரோகித்.
இதுவரை ஐபிஎல் ஆட்டங்களில் மொத்தமாக 13 முறை டக் அவுட்டாகி வெளியேறியுள்ளார் ரோகித். அதில் மூன்று முறை பிளே ஆப் சுற்றில் ரன் எதுவும் எடுக்காமல் அவுட்டாகியுள்ளார் அவர்.
இதன் மூலம் சென்னையின் ஹர்பஜன் சிங் மற்றும் பெங்களூர் அணியின் பார்த்திவ் பட்டேல் படைத்த மோசாமான சாதனை பட்டியலில் இப்போது ரோகித்தும் இணைந்துள்ளார்.
மூவரும் ஐபிஎல் போட்டிகளில் தலா 13 முறை ரன் எதுவும் எடுக்காமல் அவுட்டாகியுள்ளனர்.
இந்த சீசனில் 11 ஆட்டங்களில் விளையாடி 264 ரன்களை மட்டுமே ரோகித் எடுத்துள்ளார்.