விளையாட்டு

அஷ்வின் பந்தில் டக் அவுட் ... மீண்டும் சொதப்பிய ரோகித்!

அஷ்வின் பந்தில் டக் அவுட் ... மீண்டும் சொதப்பிய ரோகித்!

EllusamyKarthik

நடப்பு ஐபிஎல் சீசனின் முதல் குவாலிபையர் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், டெல்லி கேபிடல்ஸ் அணியும் விளையாடுகின்றன.

டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. 

மும்பை அணிக்காக டி காக்கும், ரோகித்தும் இன்னிங்க்ஸை ஓப்பன் செய்தனர். 

முதல் ஓவரில் மும்பை 15 ரன்கள் எடுத்த நிலையில் அஷ்வின் வீசிய இரண்டாவது ஓவரின் மூன்றாவது பந்தை சந்தித்த ரோகித் டக் அவுட்டாகி வெளியேறினார். அது இந்த ஆட்டத்தில் ரோகித் சந்தித்த முதல் பந்தும் கூட. 

93.5 கிலோ மீட்டர் வேகத்தில் லெக் ஸ்டம்ப் திசையில் வந்த குட் லென்த் டெலிவரியை மிஸ் செய்து LBW முறையில் அவுட்டானார். 

இந்த சீசனில் 11 ஆட்டங்களில் விளையாடி 264 ரன்களை மட்டுமே ரோகித் எடுத்துள்ளார்.