உலகக்கோப்பை கால்பந்து வரலாற்றில் தொடர்ச்சியாக 7 போட்டிகளில் கோல் அடித்த வீரர் என்ற பெருமையை அர்ஜென்டிவாவின் மெஸ்ஸி பெற்றுள்ளார். ஜோர்டானுக்கு எதிரான போட்டியில் அடித்த கோல் மூலம் மெஸ்ஸி இச்சாதனையை படைத்தார்.
இப்போட்டியில் 3 - 1 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா வெற்றிபெற்றிருந்தது. மெஸ்ஸி 2022 உலகக்கோப்பையில் 4 போட்டிகளில் தொடர்ந்து கோல் அடித்த நிலையில் இம்முறை தொடர்ந்து 3 போட்டிகளில் கோல் அடித்துள்ளார். மேலும் உலகக்கோப்பை போட்டி வரலாற்றில் அதிக கோல் அடித்த வீரர் என்ற பெருமையும் மெஸ்ஸி பெற்றுள்ளார்.
இதற்கு முன் பிரான்ஸின் ஜஸ்ட் ஃபோன்டைன் (1958) மற்றும் பிரேசிலின் ஜெய்ர்சின்ஹோ (1970) ஆகியோர் தொடர்ந்து 6 போட்டிகளில் கோல் அடித்ததே சாதனையாக இருந்தது. மெஸ்ஸி அந்தச் சாதனையை முறியடித்துள்ளார்.