உலகக் கோப்பை கால்பந்தாட்டப் போட்டியில் தனது இரண்டாவது ஆட்டத்தில் குரேஷியாவுடன் மோதுகிறது அர்ஜென்டினா. இந்தப் போட்டியில் வெற்றிப் பெற்றால் மட்டுமே அர்ஜென்டினா தொடர்ந்து உலக் கோப்பை போட்டியில் நீடிக்க முடியும்.
குரூப் டி பிரிவில் இடம் பெற்றுள்ள ஆர்ஜென்டீனாவும் - குரோஷியாவும் வியாழக்கிழமை இரவு நோவாகிராடில் நடைபெறுகிறது. அர்ஜென்டினா தனது முந்தையப் போட்டியில் உலகக் கோப்பைக்கு முதல் முறையாக தகுதி பெறும் ஐஸ்லாந்திடம் டிரா மட்டுமே செய்தது. அர்ஜென்டினாவின் நட்சத்திர வீரரான மெஸ்ஸியால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. இதனால் ஆர்ஜென்டினாவுக்கு 1 புள்ளி மட்டுமே கிடைத்தது.அதே நேரத்தில் குரோஷியா 2-0 என நைஜீரிய அணியை வீழ்த்தி உற்சாகத்துடன் ஆர்ஜென்டினாவை எதிர்கொள்கிறது.
குரூப் டி பிரிவில் 3 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. ஏற்கெனவே இரு அணிகளும் 5 முறை உலக் கோப்பை போட்டியில் மோதியுள்ளன. இதில் ஆர்ஜென்டினா 2, குரோஷியா 1 முறை வெற்றிப் பெற்றுள்ளன. மெஸ்ஸி ஏற்கெனவே 2 உலகக் கோப்பைகளில் குரோஷியாவுக்கு எதிரான ஆட்டங்களில் கோலடித்துள்ளார். கோப்பையை வெல்லும் அணி எனக் கருதப்படும் ஆர்ஜென்டினா இந்த ஆட்டத்தில் வென்றால் தான் போட்டியில் நீடிக்க முடியும் என்பதால் குரோஷியாவுடன் கடுமையாக விளையாடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.