விளையாட்டு

கால்பந்தாட்ட ரசிகர்களுக்கு இன்று மெஸ்ஸியின் தரிசனம் !

கால்பந்தாட்ட ரசிகர்களுக்கு இன்று மெஸ்ஸியின் தரிசனம் !

உலகக் கால்பந்தாட்ட ரசிகர்களின் மானசீக காதலர் லியோனல் மெஸ்ஸி. அர்ஜென்டினா அணியை தெரியுமோ தெரியாதோ ? ஏன் கால்பந்தாட்டம் குறித்து தெரியுமோ தெரியாதோ ? ஆனால் மெஸ்ஸி என்ற பெயரைச் சொன்னால் அனைவருக்கும் தெரியும்.

உலகக் கால்பந்து ரசிகர்களுக்கு பிடித்தமான கால் மெஸ்ஸியுனையது. அது களத்தில் பல்வேறு மாயா ஜாலங்களை செய்து முடியாத கோல்களையும், கோலாக்கும். அப்படிப்பட்ட மெஸ்ஸியின் ஆட்டத்தை இன்று ரசிக்கலாம். உலகக் காலபந்தாட்ட தொடரின் இன்றைய ஆட்டத்தில் அர்ஜென்டினா - ஐஸ்லாந்து அணிகள் மோதுகின்றன.

1978, 1986 உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்ற ஆர்ஜென்டீனா குறிப்பிடத்தக்க வெற்றி எதையும் பெறவில்லை. தற்போது நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி இடம் பெற்ற நிலையில் கடந்த 2014 உலகக் கோப்பையில் இறுதிச் சுற்றுவரை முன்னேறியது. மேலும் 2015, 2016 கோபா அமெரிக்க போட்டியிலும் தோல்வியைத் தழுவியது. 5 முறை உலகின் சிறந்த வீரர் விருதை பெற்றுள்ள அவருக்கு இது பெரும் குறையாகவே இருந்து வருகிறது.

எனவே இம்முறை நிச்சயம் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற இலக்கில் கடும் பயிற்சியை மேற்கொண்டு வந்தார் மெஸ்ஸி. உலகக் கோப்பைக்கு முதன்முறையாக ஐஸ்லாந்து அணி தகுதி பெற்றுள்ள நிலையில் ஜாம்பவான் ஆர்ஜென்டீனாவை சமாளிக்குமா என கேள்வி எழுந்துள்ளது. ஆனால் யூரோ 2016 சாம்பியன் போட்டியில் ஐஸ்லாந்து அணி சிறப்பாக ஆடியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தப் போட்டி இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு தொடங்குகிறது.