விளையாட்டு

பார்சிலோனா அணியிலிருந்து விலக மெஸ்ஸி முடிவு : ஒப்பந்தம் அனுமதிக்குமா?

பார்சிலோனா அணியிலிருந்து விலக மெஸ்ஸி முடிவு : ஒப்பந்தம் அனுமதிக்குமா?

EllusamyKarthik

உலகின் தலைசிறந்த கால்பந்தாட்ட கிளப் அணிகளில் ஒன்று பார்சிலோனா. அண்மையில் இந்த அணி ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் தொடரில் தோல்வியை தழுவிய நிலையில் அந்த அணியின் நட்சத்திர வீரரும், கால்பந்தாட்ட உலகின் சிறந்த வீரர்களில் ஒருவருமான மெஸ்ஸி பார்சிலோனா அணியை விட்டு விலக முடிவு செய்துள்ளதாக தகவல் வந்துள்ளது. 

இருப்பினும் பார்சிலோனா அணியோடு அவர் ஆண்டுதோறும் மேற்கொண்டு வரும் ஒப்பந்தத்தினால் அவரது முடிவுக்கு சட்ட ரீதியாக சிக்கல்கள் வரலாம்  என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆண்டு தோறும் மே மாதம் 31 ஆம் தேதியன்று பார்சிலோனா அணியுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள வீரர்கள் அணியிலிருந்து விலக விரும்பினால் அடுத்த ஆண்டுக்கான ஒப்பந்தத்தை மேற்கொள்ளாமல் விலகி செல்லலாம். தற்போது கொரோனா அச்சுறுத்தலினால் அது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மெஸ்ஸியின் கோரிக்கையை ஏற்க மறுத்து அணியிலிருந்து விடுவிக்க பார்சிலோனா மறுத்துவிட்டால் அவர் வேறொரு அணிக்கு மாறுதலாகி (டிரான்ஸ்பர்) செல்ல வாய்ப்புள்ளதாகவும் சொல்லப்படுகிறது.