விளையாட்டு

’முதல்ல கழற்றிவிட்டாங்க, இப்ப திரும்ப அழைக்கிறாங்க, ஒண்ணுமே புரியல...’ பங்களா. கேப்டன் அதிருப்தி!

’முதல்ல கழற்றிவிட்டாங்க, இப்ப திரும்ப அழைக்கிறாங்க, ஒண்ணுமே புரியல...’ பங்களா. கேப்டன் அதிருப்தி!

webteam

ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது. இதில் இந்தியா, பாகிஸ் தான், இலங்கை, ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், ஹாங்காங் ஆகிய அணிகள் பங்கேற்கின்றன. லீக் சுற்று முடிவில் ‘ஏ’ பிரிவில் இருந்து இந்தியா, பாகிஸ்தான், ‘பி’ பிரிவில் இருந்து ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் அணிகள் சூப்பர்-4 சுற்றுக்கு முன்னேறின. இரண்டு லீக்கிலும் தோல்வி யடைந்த இலங்கை, ஹாங்காங் அணிகள் வெளியேறிவிட்டன. அடுத்து சூப்பர் 4 சுற்று போட்டி நடந்து வருகிறது.

இந்த தொடரின் முதல் போட்டியில் இலங்கை அணியுடன் வெற்றிகொண்ட பங்களாதேஷ் அணி, ஆபாகானிஸ்தான் மற்றும் இந்தியாவுடன் நடந்தப் போட்டியில் தோல்வியை தழுவியது. இதையடுத்து அபுதாபியில் நடக்கும் இன்றைய போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை பங்களாதேஷ் அணி மீண்டும் சந்திக்கிறது. இதையடுத்து 26ஆம் தேதி பாகிஸ்தானை சந்திக்க இருக்கிறது.

இந்நிலையில் அந்த அணியில் இருந்து கழற்றிவிடப்பட்ட சவும்யா சர்கார், இம்ருல் கயஸ் ஆகியோர் மீண்டும் அணிக்கு அழைக்கப்பட்டுள் ளனர். இதனால் அதிருப்தியை வெளியிட்டுள்ளார் கேப்டன் மோர்டாசா.

‘அவர்களை மீண்டும் அழைத்தது பற்றி என்னிடம் பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் கலந்தாலோசிக்கவில்லை.  அவர்கள் சிறப்பாக விளை யாடவில்லை என்றுதான் அணியில் இருந்து நீக்கப்பட்டனர். இப்போது அவர்களை அணியில் மீண்டும் சேர்த்தால் எப்படி? இங்குள்ள அழுத்த த்தை புரிந்துகொண்டு உடனடியாக அவர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்களா என்று தெரியவில்லை’ என்று வருத்தத்தை தெரிவித்துள்ளார்.