ஒலிம்பிக் பதக்கம் வென்ற இந்திய குத்துச்சண்டை நாயகி மேரிகோம் ஓராண்டு கால இடைவேளைக்கு பின் மீண்டும் களமிறங்குகிறார்.
மங்கோலியாவில் அடுத்த மாதம் நடைபெறும் சர்வதேச குத்துச்சண்டை தொடரில், 51 எடைப்பிரிவில் அவர் களமிறங்குகிறார். இதற்காக ஆறு மாதங்களாக கடும் பயிற்சியை மேற்கொண்டுள்ளதாக மேரி கோம் தெரிவித்துள்ளார். அவருடன் 60 கிலோ எடைப்பிரிவில் பிரியங்கா சவுத்ரி, 75 கிலோ எடைப்பிரிவில் கலாவந்தி ஆகியோரும் கலந்து கொள்கின்றனர்.