ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியில் மரியா ஷரபோவா களமிறங்குகிறார்.
ரஷ்ய வீராங்கனை மரியா ஷரபோவாவுக்கு ஊக்கமருந்து சர்ச்சையால் 15 மாதங்கள் தடைவிதிக்கப்பட்டிருந்தது. தற்போது அமெரிக்க ஓபனில் நேரடியாக முதல் சுற்றில் விளையாட போட்டி அமைப்பாளர்கள் 'வைல்டு கார்டு' அனுமதி வழங்கியுள்ளனர். 30 வயதான மரியா ஷரபோவா, தற்போது தரவரிசையில் 148ஆவது இடத்தில் உள்ளார். அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி வரும் 28 ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், அவரின் ரசிகர்கள் ஷரபோவாவின் ஆட்டத்தை காண ஆவலுடன் உள்ளனர்.