விளையாட்டு

ஈஃபிள் கோபுரத்தில் ஏறி ஷரபோவா போஸ்!

ஈஃபிள் கோபுரத்தில் ஏறி ஷரபோவா போஸ்!

Rasus

டென்னிஸ் நட்சத்திரங்களான மரியா ஷரபோவா, மேடிசன் கீஸ், லூகாஸ் பௌலே ஆகியோர் விளம்பரம் ஒன்றிக்காக பாரீஸில் உள்ள புகழ்பெற்ற ஈஃபிள் கோபுரம் மீது நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

சூரியன் அஸ்தமனத்தின் போது ரசிகர்களை வசீகரிக்கும் உடையணிந்து அவர்கள் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். பிரஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியை முன்னிட்டு தனியார் நிறுவனம் ஒன்று தங்களின் தயாரிப்பை விளம்பரப்படுத்த மூவரையும் ஒப்பந்தம் செய்துள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த மேடிசன் கீஸ், பிரான்ஸை சேர்ந்த லூகாஸ் பௌலே பிரஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் களமிறங்க உள்ளனர்.