விளையாட்டு

அன்று தோனியை போல்.. இன்று கில்லின் ஆட்டத்தை பார்த்து வியக்கிறேன் - சஞ்சய் மஞ்ச்ரேக்கர்

webteam

இரட்டைச் சதம் அடித்த சுப்மான் கில்லை, முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தோனியுடன் ஒப்பிட்டுப் பேசியிருக்கிறார்.

நியூசிலாந்துக்கு எதிராக கடந்த ஜனவரி 18ஆம் தேதி ஐதராபாத்தில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றியைப் பெற்றது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 8 விக்கெட் இழப்புக்கு 349 ரன்கள் எடுத்தது. இதில் தொடக்க பேட்டராய்க் களமிறங்கிய சுப்மன் கில் 149 பந்துகளில் 19 பவுண்டரி, 9 சிக்ஸர் உதவியுடன் 208 ரன்கள் எடுத்து குறைந்த வயதில் இரட்டைச் சதம் அடித்த வீரர் என்ற சாதனையைப் படைத்தார். இதன்மூலம் சுப்மன் கில்லுக்கு பாராட்டுகளும், வாழ்த்துகளும் குவிந்து வருகிறது.

இந்த நிலையில், இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர், சுப்மன் கில்லை பாராட்டியுள்ளார். முன்னாள் கேப்டன் தோனியையும் அவர் நினைவுகூர்ந்திருக்கிறார். இதுகுறித்து அவர், ‘தோனியை நான் முதன்முதலில் பார்த்தபோது அவர் அடிக்கும் நேரான சிக்ஸர்களைப் பார்த்து மிகப்பெரிய வெற்றியாளராக இருப்பார் என்றேன். அதே பரிசு உங்களுக்கும் உண்டு. அதற்காக உங்கள் விரல்களைத் தேடுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

- ஜெ.பிரகாஷ்