விளையாட்டு

தலையில் காயம்: டி20 தொடரில் இருந்து விலகினார் சோயிப் மாலிக்!

தலையில் காயம்: டி20 தொடரில் இருந்து விலகினார் சோயிப் மாலிக்!

webteam

நியூசிலாந்து கிரிக்கெட் அணியுடனான டி20 தொடரில் இருந்து பாகிஸ்தான் அணியின் ஆல் ரவுண்டர் சோயிப் மாலிக் காயம் காரணமாக விலகியுள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரண்டு அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை,  5-0 என்ற கணக்கில் நியூசிலாந்து அணி கைப்பற்றியது. இதையடுத்து டி20 போட்டித் தொடர் நடக்க இருக்கிறது. இதில் இருந்து சோயிப் மாலிக் விலகியுள்ளார்.

நியூசிலாந்து அணியுடனான நான்காவது ஒரு நாள் போட்டியின் போது, ஹெல்மெட் அணியாமல் ஆடிக்கொண்டிருந்த சோயிப் மாலிக் மீது பந்து பலமாக தாக்கியது. இதையடுத்து அவர் நிலைகுலைந்தார். பின்னரும் அவர் தொடர்ந்து விளையாடி வந்தார். இந்நிலையில் இந்த காயம் காரணமாக அவர் டி20 தொடரில் இருந்து விலகியுள்ளார்.