விளையாட்டு

மலேசியாவில் ஆசியன் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டிகள்..!

webteam

ஆசியன் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் இரண்டு குழுக்களுக்கான போட்டிகளை மலேசியா நடத்தப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.  ஏற்கெனவே மேற்கு மண்டலத்தைச் சேர்ந்த நான்கு குழுக்களை கத்தார் ஏற்றுக்கொண்ட நிலையில், கிழக்கு மண்டலத்தில் ஜி, ஹெச் அணிகளுக்கான போட்டிகளை மலேசியா நடத்தப்போகிறது.

அந்தக் குழுக்களில் ஜப்பான், தென்கொரியா, ஆஸ்திரேலியா மற்றும் மலேசிய அணிகள் இடம்பெற்றுள்ளன. கொரோனா பரவல் காரணமாக மார்ச் மாதம் நடைபெறவிருந்த சாம்பியன்ஸ் லீக் போட்டிகள் செப்டம்பர் 14 ஆம் தேதி கத்தாரில் தொடங்கும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது. அடுத்து அக்டோபர் 17ஆம் தேதியன்று மலேசியாவில் போட்டிகள் நடைபெறவுள்ளன.   

ஆசியன் சாம்பியன்ஸ் லீக் போட்டியில் ஈ மற்றும் எஃப் குழுக்கள் மற்றும் நாக்அவுட் ஸ்டேஜ் போட்டிகளுக்கான மையப்படுத்தப்பட்ட ஆடுகளம் இன்னும் முடிவுசெய்யப்படவில்லை என்றும் ஆசிய கால்பந்து அமைப்பு தெரிவித்துள்ளது.