இந்திய ஒருநாள் மற்றும் டி20 அணியின் கேப்டன் பதவியில் இருந்து மகேந்திர சிங் தோனி விலகியுள்ளார்.
அதேநேரம் இங்கிலாந்து அணிக்கெதிரான ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் வீரராக கலந்துகொள்ள தோனி தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தோனியின் பதவி விலகல் தொடர்பான முடிவு தேர்வுக்குழுவுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இந்த தகவலை உறுதிசெய்துள்ள இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைமை செயலதிகாரி ராகுல் ஜோரி, நாட்டின் ஒவ்வொரு கிரிக்கெட் ரசிகன் சார்பாகவும், பிசிசிஐ சார்பாகவும் தோனிக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகத் தெரிவித்துள்ளார். தோனியின் சிறப்பான தலைமையின் கீழ் இந்திய கிரிக்கெட் அணி பல்வேறு உயரங்களை எட்டியதாகவும் பாராட்டு தெரிவித்துள்ளார்.