இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சர்வதேச கிரிக்கெட்டின் சிறந்த ஃபினிஷருமான மகேந்திர சிங் தோனி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து கடந்த ஆகஸ்ட் 15 அன்று ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அதன்பிறகு ராஞ்சியில் உள்ள தனது விவசாய பண்ணையில் இயற்கை முறையில் விவசாயம் செய்யும் பணிகளை ஆர்வத்துடன் மேற்கொண்டு வருகிறார் அவர். பழங்கள், காய்கறிகள், கால்நடை வளர்ப்பு என படுபிஸியாக பண்ணையில் பணிகளை கவனித்து வருகிறார். அண்மையில் இங்கு விளைந்த விளைபொருட்களை ஏற்றுமதியும் செய்திருந்தார் தோனி.
இந்நிலையில் தோனி தனது பண்ணையில் பணியாற்றும் ஊழியர்களுடன் போட்டோ ஒன்று எடுத்துக் கொண்டுள்ளார். அது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்தப் படத்தில் தோட்டத்தில் பணியாற்றும் பெண் ஊழியர்களுடன் புன்னகைத்து நிற்கிறார் கேப்டன் கூலான தோனி.
வரும் 2021 ஐபிஎல் தொடரில் சென்னை அணியை வழிநடத்த உள்ளார் தோனி என்பதும் குறிப்பிடத்தக்கது.
நன்றி : OUTLOOK MAGAZINE