விளையாட்டு

துபாயில் தோனியின் கிரிக்கெட் அகாடமி

துபாயில் தோனியின் கிரிக்கெட் அகாடமி

webteam

இந்திய கிரிக்கெட் அணி வீரர் மகேந்திர சிங் தோனி, துபாயில் கிரிக்கெட் அகாடமி தொடங்கவுள்ளார்.

துபாயைச் சேர்ந்த பசிபிக் ஸ்போர்ட்ஸ் கிளப்புடன் இணைந்து அவர் கிரிக்கெட் அகாடமியை தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எம்.எஸ்.தோனி என பெயரிடப்படும் இந்த கிரிக்கெட் அகாடமியை, ஐக்கிய அரபு அமீரகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் தென்னாப்ரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளிலும் தொடங்க திட்டமிட்டுள்ளனர்.

வீரேந்திர சேவாக், ஹர்பஜன் சிங், யுவராஜ் ஆகியோர் ஏற்கனவே கிரிக்கெட் அகாடமி நடத்தி வருகின்றனர். தற்போது இந்த வரிசையில் தோனியும் இணையவுள்ளார். ஆனால் அவர்கள் அனைவரும் உள்நாட்டில் அகாடமி நடத்தி வருகிறார்கள். தோனி வெளிநாட்டில் அகாடமி தொடங்குகிறார்.