விளையாட்டு

இந்திய அணியின் பயிற்சியாளராக விரும்பவில்லை: வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஜெயவர்த்தனா

இந்திய அணியின் பயிற்சியாளராக விரும்பவில்லை: வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஜெயவர்த்தனா

webteam

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பொறுப்பு போன்ற முழுநேர பணியை ஏற்கும் நிலையில் தற்போது இல்லை என்று இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் மகிளா ஜெயவர்த்தனா தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள ஜெயவர்த்தனா, ’இந்திய அணியின் பயிற்சியாளர் பதவி குறித்து நான் ஆர்வம் காட்டுவதாக வெளியான ஊகங்களில் உண்மையில்லை. நான் தற்போது மும்பை இந்தியன்ஸ் மற்றும் குல்னா ஆகிய அணிகள் மீது மட்டுமே கவனம் செலுத்தி வருகிறேன். தற்போதைய சூழலில் இந்திய அணியின் பயிற்சியாளர் போன்ற முழுநேர பணியை ஏற்கும் நிலையில் நான் இல்லை’ என்று விளக்கமளித்துள்ளார். இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த அனில் கும்ப்ளே, பதவி விலகலைத் தொடர்ந்து, புதிய பயிற்சியாளரைத் தேர்ந்தெடுக்கும் பணியில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய (பிசிசிஐ) நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. பயிற்சியாளர் பதவிக்கு விரேந்திர சேவாக், டாம் மூடி உள்ளிட்டோர் விண்ணப்பித்துள்ள நிலையில், விண்ணப்பிப்பதற்கான காலஅவசகாத்தை ஜூலை 9 வரை பிசிசிஐ நீட்டித்துள்ளது. ஜூலை 26ல் தொடங்கும் இலங்கை அணிக்கெதிரான தொடருக்கு முன்பாக இந்திய அணிக்கு புதிய பயிற்சியாளர் நியமிக்கப்படுவார் என்று பிசிசிஐ ஏற்கனவே அறிவித்துள்ளது.