விளையாட்டு

பாரிஸில் நடைபெற இருக்கும் 2024 ஒலிம்பிக் போட்டி

பாரிஸில் நடைபெற இருக்கும் 2024 ஒலிம்பிக் போட்டி

webteam

33-வது ஒலிம்பிக் போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெறுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.

பாரிஸ் நகரத்துடன், போட்டியில் இருந்த லாஸ் ஏஞ்‌சல்ஸ் நகரம், 2028-ல் நடைபெறவுள்ள 34-வது ஒலிம்பிக்கை நடத்த சம்மதம் தெரிவித்துள்ளது. இதனால், 2024 ஆம் ஆண்டில் 33-வது ஒலிம்பிக் போட்டி பாரிஸில் நடக்க உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது. லாஸ் ‌ஏஞ்சல்ஸின் சுமுக முடிவுக்கு சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி வரவேற்பு தெரிவித்துள்ளது. கோடைக்கால மற்றும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை அமெரிக்கா 9 முறையும், பிரான்ஸ் 6 முறையும் ஏற்கனவே நடத்தியுள்ளன.