இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் புது ஹீரோ ஆகியிருக்கிறார், சாம் குர்ரன்! பந்துவீச்சு, பேட்டிங் இரண்டிலும் மிரட்டி, இந்திய அணியின் தோல்விக்கு காரணமான இந்த குர்ரனுக்கு வயது 20-தான்!. அதுவும் இது அவருக்கு இரண்டாவது டெஸ்ட் போட்டி!. இரண்டாவது போட்டியிலேயே சிறந்த ஆல் ரவுண்ட் திறமையை காண்பிடித்த குர்ரனை பாராட்டித் தள்ளுகிறது இங்கிலாந்து மீடியா.
பிர்மிங்ஹாமில் நடைபெற்ற போட்டியில், முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 287 ரன்களும், இந்திய அணி 274 ரன்களும் எடுத்தன. இந்திய அணி வெறும் 13 ரன்களே பின் தங்கி இருந்தது. இந்நிலையில் இரண்டாவது இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து அணி அஷ்வின், இஷாந்த் சர்மா பந்துவீச்சில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 87 ரன்கள் எடுப்பதற்கு இங்கிலாந்து அணி 7 விக்கெட்டுகளை இழந்துவிட்டது.
இதனால், 120 ரன்களுக்கு அந்த அணி சுருண்டு விடும் என்றுதான் எல்லோரும் நினைத்தார்கள். ஆனால், தனி ஆளாக ஆட்டத்தின் போக்கையே மாற்றியவர் சாம் குர்ரன். 65 பந்துகளில் 63 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். அவரது ஆட்டத்தால் இங்கிலாந்து அணி 180 ரன்கள் எடுத்தது இங்கி லாந்து. இதனால், 194 ரன்கள் வெற்றி இலக்காக இந்திய அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது. அவரை மட்டும் விரைவில் வீழ்த்தியிருந்தால் இந்திய அணி வெற்றி பெற்றிருக்கும். பல கேட்ச்களை இந்திய வீரர்கள் கோட்டை விட்டது தனிக்கதை. இங்கிலாந்து அணியின் முதல் இன்னிங்சிலும் கர்ரன் 71 பந்துகளில் 24 ரன்கள் சேர்த்தார்.
இந்திய வீரர்கள் முரளி விஜய், ஷிகர் தவான், கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்ட்யா ஆகியோரை சொற்ப ரன்னில் ஆட்டமிழக்க செய்தவர் இவர்தான். 59 ரன்களுக்குள் முதல் மூன்று விக்கெட்டுகளை சாய்த்துவிட்டார். இரண்டாவது இன்னிங்சில் அதிகம் அவர் பந்துவீசவில்லை. 6 ஓவர்கள் மட்டுமே பந்துவீசி ஒரு விக்கெட்டை கைப்பற்றினார்.
அனுபவமே இல்லாத ஒரு வீரரை களமிறக்கி இங்கிலாந்து அணி இந்தியாவை வீழ்த்திவிட்டது. ஆட்டநாயகன் விருது அவருக்கு வழங்கப் பட்டது.
அப்போது பேசிய சாம் குர்ரன், ‘கனவு காண்பதைப்போல் உணர்கிறேன். உண்மையை சொல்ல வேண்டும் என்றால், முதல் இன்னிங்சில் விராத் கோலி, கீழ்வரிசை வீரர்களுடன் எப்படி பேட்டிங் செய்தார் என்பதைப் பார்த்துதான் கற்றுக்கொண்டேன். மறுநாள் குமார் சங்ககாராவை ஓட்ட லில் சந்தித்தேன். அவர் கீழ்வரிசை வீரர்களுடன் விளையாடுவது பற்றி சொன்னார். அவர்களிடம் கற்றதை வைத்து இரண்டாவது இன்னிங்ஸி ல் கீழ்வரிசை வீரர்களுடன் பேட்டிங் செய்தேன். பென் ஸ்டோக்ஸும் சிறப்பாக பந்துவீசினார்.
டெஸ்ட் கிரிக்கெட்டை, இந்த வீர்ர்களுடன் ஆடுவேன் என்று நினைக்கவில்லை, நான் கிரிக்கெட்டைப் பார்த்துப் பார்த்தே வளர்ந்தவன், ஒவ்வொ ரு நாளுமே கற்றுக்கொண்டிருக்கிரேன். ஸ்டுவர்ட் பிராட், பென் ஸ்டோக்ஸ், ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகியோரிடம் இன்னும் கற்றுக் கொண்டிருக்கிறேன்” என்றார்.