வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியிலும் பங்களாதேஷ் அணி வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது.
பங்களாதேஷ் கிரிக்கெட் அணி, வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் அமெரிக்காவில் கிரிக்கெட் விளையாடி வந்தது. இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் அணி கைப்பற்றியது. இதையடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் இரு அணிகளும் விளையாடின. இதை பங்களாதேஷ் அணி 1-2 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இதையடுத்து 3 போட்டிகள் கொண்ட டி 20 போட்டியில் விளையாடியது. முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி அபார வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டியில் பங்களாதேஷ் அணி வெற்றி பெற்றது.
தொடர் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் மூன்றாவது டி20 போட்டி இன்று அதிகாலை லாடர்ஹில்லில் (Lauderhill) நடந்தது. டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி முதலில் பேட்டிங் செய்தது. அதன்படி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் எடுத்தது.
அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் லிடன் தாஸ் 32 பந்தில் 61 ரன்கள் எடுத்தார். தமிம் இக்பால் 21 ரன்களும் மஹமத்துல்லா 32 ரன்களும் எடுத்தனர்.
(லிடன் தாஸ்)
பின்னர் வெஸ்ட் இண்டீஸ் அணி விளையாடியது. போட்டியின் இடையே மழை குறுக்கிட்டது. அந்த அணி 17.1 ஓவர்களில் 135 ரன்கள் எடுத்தி ருந்த நிலையில் போட்டி கைவிடப்பட்டு டக்வொர்த் விதிப்படி முடிவு அறிவிக்கப்பட்டது. அதன்படி 19 ரன்கள் வித்தியாசத்தில் பங்களாதேஷ் அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து இந்த தொடரையும் பங்களாதேஷ் கைப்பற்றியது. வெஸ்ட் இண்டீஸ் அணியில், ஆண்ட்ரூ ரஸல் அதிகபட்சமாக 21 பந்துகளில் 47 ரன்கள் எடுத்தார்.