விளையாட்டு

பார்சிலோனா பயிற்சி முகாமில் பங்கேற்காத மெஸ்ஸி !

jagadeesh

லா லீகா கால்பந்து தொடரில் விளையாடி‌வரும் பார்சிலோனா அணியின் பயிற்சி முகாமில் நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்ஸி கலந்து கொள்ளவில்லை.

அண்மையில் நடந்து முடிந்த சாம்பியன்ஸ்‌ லீக் காலிறுதியில் பார்சிலோனா படுதோல்வி அடைந்ததை தொடர்ந்து தன்னை அணியில் இருந்து விடுவிக்குமாறு மெஸ்ஸி கேட்டுக் கொண்டுள்ளார். வரும் சீசனுக்கான மருத்துவப் பரிசோதனையில் மெஸ்ஸி பங்கேற்‌காததும் சர்ச்சையை கிளப்பியது.

இந்நிலையில், பயிற்சி முகாமிலும் அவர் கலந்து கொள்ளாததால் அணி நிர்வாகத்துடன் அதிருப்தி அதிகரித்துள்ளதாகத் தெரிகிறது.