நீண்ட காலமாக தனது காதலியுடன் லிவிங்டுகெதராக வாழ்ந்து வந்த கால்பந்து சூப்பர் ஸ்டார் லியோனல் மெஸ்ஸி இன்று திருமணம் செய்துகொள்கிறார். திருமணத்திற்கு முன்பே அவர்கள் இரண்டு குழந்தைகளைப் பெற்றுக் கொண்டனர்.
அர்ஜென்டினாவைச் சேர்ந்த பிரபல கால்பந்து வீரர் லயோனல் மெஸ்சி, தனது நீண்ட நாள் காதலியை இன்று திருமணம் செய்துகொள்கிறார். இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. மெஸ்சி தனது காதலியான ஆண்டோலினா உடன் ஏற்கனவே இணைந்து வாழ்கிறார். இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளன. குழந்தை பெற்ற பிறகு தற்போது இவர்கள் திருமண பந்தத்தில் இணைய இருக்கிறார்கள். மெஸ்சியின் திருமண நிகழ்ச்சியில் நெய்மர், சுவாரஸ் உள்ளிட்ட முன்னணி கால்பந்து வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.