ஐபிஎல் தொடரிலிருந்து விலகி உள்ள ரபாடா இடத்திற்கு மாற்றாக இங்கிலாந்து வீரர் அறிவிக்கபட்டுள்ளார்.
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இறுதி டெஸ்டின்போது முதுகு வலியால் அவதிப்பட்ட தென்ஆப்பிரிக்கா அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ரபாடா சுமார் மூன்று மாதம் கிரிக்கெட்டில் இருந்து விலக இருப்பதாக அறிவித்தார். இதனால் ஐபிஎல் தொடரில் பங்கேற்க மாட்டார் என்ற நிலையில் 4.2 கோடி ரூபாய் கொடுத்து ரபாடாவை ஏலம் எடுத்தது இருந்த டெல்லி டேர்டெவில்ஸ் அணி தற்போது மாற்று வீரரை அறிவித்துள்ளது. ரபாடா இடத்தில் இங்கிலாந்தை சேர்ந்த லியாம் பிளன்கெட் விளையாடுவார் என அறிவிக்கபட்டுள்ளது. இங்கிலாந்து அணிக்காக 15 டி20 போட்டியில் விளையாட உள்ள இவர் 19 விக்கெட்டுகள் வீழ்த்தி உள்ளார்.