விளையாட்டு

"என்னை நானாகவே இருக்க விடுங்கள்” -மற்றொரு வீரருடன் ஒப்பிடுவதற்கு சூர்யகுமார் யாதவ் காட்டம்

"என்னை நானாகவே இருக்க விடுங்கள்” -மற்றொரு வீரருடன் ஒப்பிடுவதற்கு சூர்யகுமார் யாதவ் காட்டம்

EllusamyKarthik

இந்திய கிரிக்கெட் அணி நாளை அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இரண்டாவது ஒருநாள் போட்டியில் விளையாட உள்ளது. இந்த போட்டிக்கு முன்பான பத்திரிகையாளர் சந்திப்பில் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் பங்கேற்று பேசினார். 

அப்போது அவரையும், முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மைக்கேல் பெவனையும் ஒப்பிட்டு கேள்வி எழுப்பியிருந்தார் பத்திரிகையாளர் ஒருவர். அதற்கு பதில் கொடுத்துள்ளார் சூர்யகுமார் யாதவ். 

“என்னை சூர்யகுமாராகவே இருக்க விடுங்கள். இந்திய அணிக்காக மிகவும் குறைவான போட்டிகளில்தான் நான் விளையாடி உள்ளேன். ஆனால் ஒன்றை மட்டும் நான் தொடர்ந்து செய்வேன். எனக்கு எந்த இடத்தில் பேட் செய்ய வாய்ப்பு கிடைத்தாலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவேன். அதன் மூலம் அணியை வெற்றிபெற செய்வேன். இதை தொடர்ந்து செய்வேன். எனது பாணியில் அச்சமின்றி விளையாடுவேன்” என தெரிவித்துள்ளார். 

சூர்ய குமார் யாதவ் இதுவரை 5 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விளையாடி 197 ரன்கள் எடுத்துள்ளார். அதேபோல், 11 டி20 போட்டிகளில் விளையாடி 244 ரன்கள் எடுத்துள்ளார். ஒருநாள் போட்டியில் ஒரு அரைசதமும், டி20 போட்டிகளில் 3 அரைசதமும் அடித்துள்ளார். ஐபிஎல் போட்டிகளில் மும்பை அணிக்காக விளையாடி வரும் அவர் 115 போட்டிகளில் 2341 ரன்கள் குவித்துள்ளார்.