பந்தயம், சூதாட்டம் ஆகியவை அனைத்து விளையாட்டுகள் மேலும் நடக்கின்றன. யார் வெல்வார்? யார் தோற்பார்? – என இருவர் தங்களுக்குள் பந்தயம் வைப்பதை சட்டத்தின் மூலம் தடுப்பது எளிதல்ல. இவை தவிர சூதாட்ட மையங்கள், சூதாட்ட இணையதளங்கள் மூலமாகவும் சூதாட்டங்கள் நடக்கின்றன. சீனா, அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகளில் சூதாட்டங்களுக்கு சட்ட அனுமதிகள் உள்ளன. இந்தியாவில் சீட்டாட்டம் உள்ளிட்ட சூதாட்டங்களுக்கு குறிப்பிட்ட இடங்களைத் தவிர அனுமதி இல்லாத நிலையில், இந்த சூதாட்டங்களில் புழங்கும் பணம் அப்படியே கறுப்புப் பணமாக மாறுகின்றது.
இந்தியாவின் கோவா, தாமன், சிக்கிம் போன்ற சில பகுதிகளில் சூதாட்டம் சட்டப்பூர்வமாக்கப்பட்டுள்ள நிலையில், அதை ஏன் மற்ற பகுதிகளுக்கும் விரிவாக்கக் கூடாது என்ற கேள்வி நெடுங்காலமாக உள்ளது. ஆனால் சூதாட்டத் தரகர்கள் விளையாட்டுகளில் ஆதிக்கம் செலுத்தி, தங்களுக்கு ஏற்ப அதன் வெற்றி தோல்விகளை தீர்மானிக்கலாம், மக்கள் பாதிக்கப்படலாம் – என்பவை உள்ளிட்ட அச்சங்களால் சூதாட்டங்களுக்கு அனுமதிகள் மறுக்கப்பட்டு வந்தன. இந்நிலையில் கடந்த 2013ஆம் ஆண்டில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் நடந்தையொட்டி நடந்த சூதாட்டங்களில் 3 லட்சம் கோடி அளவுக்குப் பணம் புழங்கியதாக எஃப்.ஐ.சி.சி.ஐ. அறிக்கை வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து பெட்டிங் மற்றும் சூதாட்டத்தை சட்டப்பூர்வமாக்குவது குறித்து ஆலோசிக்குமாறு சட்ட கமிஷனிற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது
உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி, பிஎஸ் சவுஹான் தலைமையிலான அந்த சட்டஆணையம் தற்போது மத்திய அரசுக்குத் தனது பரிந்துரைகளை வழங்கியுள்ளது. அதில்,
இந்தப் பரிந்துரைகளுக்கு கலவையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. குறிப்பாக சட்ட ஆணையத்தின் உறுப்பினரான சிவக்குமார் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ’பல்வேறு தரப்பு மக்கள் வசிக்கும் இந்திய நாட்டில் சூதாட்டத்தை சட்டபூர்வமாக்கினால் விளைவுகள் மிக மோசமாக இருக்கும்’ என்று அவர் கூறியுள்ளார்.