விளையாட்டு

பதவி விலகினார் லலித் மோடி

பதவி விலகினார் லலித் மோடி

Rasus

நாக்பூர் மாவட்ட கிரிக்கெட் சங்கத் தலைவர் பதவியிலிருந்து லலித் மோடி விலகியுள்ளார். இதனையடுத்து ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கத்துடனான அவரது தொடர்பு முடிவுக்கு வந்தது.

ராஜஸ்தான் கிரிக்கெட் சங்கத்தில் லலித் மோடி உறுப்பினராக இருப்பதால் அம்மாநில கிரிக்கெட் சங்கத்திற்கு பிசிசிஐ தடைவிதித்திருந்தது. இதனிடையே தனிநபருக்காக ஒரு கிரிக்கெட் சங்கம் பாதிக்கப்படுவதை தாம் விரும்பவில்லை என்றும் அதனால் பதவி விலகுவதாகவும் லலித் மோடி கூறியுள்ளார்.

ஐபிஎல் அமைப்பின் தலைவராக இருந்த காலகட்டத்தில், நிதிமுறைகேடு செய்ததாக லலித் மோடி மீது குற்றச்சாட்டு உள்ளது. இது தொடர்பான விசாரணை நடைபெற்று வரும் நிலையில் லலித் மோடி தற்போது வெளிநாட்டில் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.