விளையாட்டு

தேசிய ஓபன் தடகள சாம்பியன்ஷிப் - லட்சுமணன், சூர்யா தங்கம் வென்றனர்

தேசிய ஓபன் தடகள சாம்பியன்ஷிப் - லட்சுமணன், சூர்யா தங்கம் வென்றனர்

rajakannan

சென்னையில் நடைபெறும் தேசிய ஓபன் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த லட்சுமணன், சூர்யா ஆகியோர் இரண்டாவது தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார். 

ராணுவ அணியில் இடம்பெற்றுள்ள லட்சுமணன், இன்று நடைபெற்ற ஆடவர் 10 ஆயிரம் ஓட்டத்தில் முதலிடம் பிடித்துள்ளார். பந்தய இலக்கை 29 நிமிடங்கள் 16 நொடிகளில் கடந்து லட்சுமணன் தங்கப்பதக்கம் வென்றார். இதேபோல், மகளிர் 10 ஆயிரம் ஓட்டத்தில் ரயில்வே அணிக்காக களமிறங்கிய சூர்யா தங்கப்பதக்கம் வென்றார். பந்தய இலக்கை 32 நிமிடங்கள் 42 நொடிகளில் கடந்து சூர்யா முதலிடம் பிடித்தார். புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த லட்சுமணனும், சூர்யாவும் ஏற்கனவே 5 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் தங்கப்பதக்கம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.