விளையாட்டு

'ஒரு கையில் பந்து இன்னொரு கையில் ஸ்டெம்ப்' சிரிப்பை ஏற்படுத்திய ரன் அவுட் முயற்சி - வீடியோ

'ஒரு கையில் பந்து இன்னொரு கையில் ஸ்டெம்ப்' சிரிப்பை ஏற்படுத்திய ரன் அவுட் முயற்சி - வீடியோ

webteam

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டி20 போட்டியில் இலங்கை பந்துவீச்சாளர் சண்டகன் செய்த ரன் அவுட் முயற்சி சிரிப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஆஸ்திரேலியா-இலங்கை அணிகள் இடையே டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் இரண்டாவது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் ஆடிய இலங்கை, தொடக்கத்திலிருந்தே விக்கெட்களை இழந்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிந்ததால் இலங்கை 19 ஓவர்களில் 117 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 

தொடர்ந்து 118 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில் கேப்டன் ஃபின்ச், முதல் பந்துலேயே ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஸ்மித், வார்னருடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் ஆஸ்திரேலிய அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்றனர். ஆஸ்திரேலிய அணி 13 ஓவர்களில் 118 ரன்களை எடுத்து வெற்றிப் பெற்றது. 

இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்த போது 13ஓவரை இலங்கை அணியின் சுழற்பந்துவீச்சாளர் சண்டகன் வீசினார். இந்த ஓவரின் இரண்டாவது பந்தை வார்னர் நேராக அடித்தார். அந்தப் பந்து மறுமுனையில் இருக்கும் ஸ்டெம்பில் பட்டது. எனினும் பந்துவீச்சாளர் கையில் பந்து படாமல் சென்றது. 

மறுமுனையிலிருந்த ஸ்மித், எல்லை கோட்டிற்கு வெளியே இருந்தார். இதனால் அவரை ரன் அவுட் செய்ய முயன்ற சண்டகன், பந்தை ஒரு கையில் வைத்துகொண்டு, மற்றொரு கையால் ஸ்டெம்பை பிடுங்கினார். அதாவது அவர் பந்து வைத்திருக்கும் கையால் ஸ்டெம்பை எடுத்திருக்க வேண்டும். அதற்குப் பதிலாக பந்து இல்லாமல் கையால் ஸ்டெம்பை பிடுங்கினார்.
இதைக் கண்டு ஆட்டமிழக்க வேண்டிய ஸ்டீவ் ஸ்மித் உட்பட மைதானத்தில் இருந்தவர்கள் பலமாகச் சிரித்தனர். 

;