விளையாட்டு

KXIP VS SRH : ஹைதராபாத்தின் வெற்றியை தட்டிப்பறித்த பஞ்சாப்

EllusamyKarthik

துபாயில் நடைபெற்ற நடப்பு ஐபிஎல் சீசனின் 43வது லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின. 

டாஸ் வென்ற ஹைதராபாத் கேப்டன் டேவிட் வார்னர் ஃபீல்டிங் தேர்வு செய்தார்.

இதனையடுத்து பஞ்சாப் அணி பேட்டிங் செய்தது.

இருபது ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்களை பஞ்சாப் எடுத்தது. 

பஞ்சாப்பிற்காக கே.எல்.ராகுலும், மந்தீப் சிங்கும் இன்னிங்க்ஸை ஓப்பன் செய்தனர். 

சீரிய இடைவெளியில் பஞ்சாப் பேட்ஸ்மேன்கள் விக்கெட்டுகளை இழந்தனர்.

சரியான பார்ட்னர்ஷிப் அமையாததால் ரன் சேர்க்க முடியாமல் தடுமாறியது பஞ்சாப். பூரன் மட்டும் நிதானமாக ஆடி 28 பந்துகளில் 32 ரன்களை சேர்த்தார். 

ஹைதராபாத் அணிக்காக ரஷீத் கான், ஹோல்டர், சந்தீப் ஷர்மா என மூவரும் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதனையடுத்து ஹைதராபாத் அணி 127 ரன்களை விரட்டியது. 

பவர் பிளே வரை விக்கெட் ஏதும் இழக்காமல் விளையாடியது ஹைதராபாத்.

பாஞ்சாப் அணியின் சுழல் பந்து வீச்சாளர்கள் ரவி பிஷோனியும், முருகன் அஷ்வினும் அடுத்தடுத் ஓவரில் விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

ஹைதராபாத்தின் இளம் வீரர் அப்துல் சமாத், ஷமியின் வேகத்தில் வீழ்ந்தார்.

அதனையடுத்து 67 ரன்களில் மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது ஹைதராபாத். 

மணீஷ் பாண்டேவும், விஜய் ஷங்கரும் ஹைதராபாத்தின் இன்னிங்க்ஸை ஸ்டெடி செய்தனர். 

இருப்பினும் அணியை வெற்றி கோட்டுக்கு அருகே எடுத்து சென்றவர்கள் அந்த டாஸ்க்கில் தவறிவிட்டனர்.

சிறிய இலக்கு தான் என்றாலும் அதனை விரட்ட ஹைதராபாத் அணி தடுமாறியது. 

மணீஷ் பாண்டே, விஜய் ஷங்கர், ஹோல்டர், ரஷீத் கான், சந்தீப் ஷர்மா, கார்க் என ஆட்டத்தின் கடைசி 23 பந்துகளில் ஆறு விக்கெட்டுகளை காலி செய்தது பஞ்சாப். 

19.5 ஓவர்கள் முடிவில் 114 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை தழுவியது. 

இந்த ஆட்டத்தில் பெற்ற வெற்றியின் மூலம் பிளே ஆஃப் வாய்ப்பை பிரகாசப்படுத்தியுள்ளது பஞ்சாப்.