துபாயில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் சீசனின் 43வது லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதுகின்றன.
டாஸ் வென்ற ஹைதராபாத் கேப்டன் டேவிட் வார்னர் ஃபீல்டிங் தேர்வு செய்தார். இதனையடுத்து பஞ்சாப் அணி பேட்டிங் செய்தது. காயம் காரணமாக பஞ்சாப் அணியின் ஓப்பனர் மயங்க் அகர்வால் இந்த ஆட்டத்தில் விளையாடவில்லை.
இந்த சீசனில் வலுவான பேட்டிங் கூட்டணியை ராகுலும், மயங்க் அகர்வாலும் கொண்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. பஞ்சாப்பிற்காக கே.எல்.ராகுலும், மந்தீப் சிங்கும் இன்னிங்க்ஸை ஓப்பன் செய்தனர். சீரிய இடைவெளியில் பஞ்சாப் பேட்ஸ்மேன்கள் விக்கெட்டுகளை இழந்தனர். அதனால் சரியான பார்ட்னர்ஷிப் அமைக்க தவறியதோடு, ரன் சேர்க்கவும் பஞ்சாப் தடுமாறியது.
ஹைதராபாத் அணிக்காக ரஷீத் கான், ஹோல்டர், சந்தீப் ஷர்மா என மூவரும் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர். பஞ்சாப் அணிக்காக பூரன் நிதானமாக ஆடினார். 28 பந்துகளில் 32 ரன்களை சேர்த்து ஆறுதல் கொடுத்தார் அவர். இருபது ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்களை பஞ்சாப் எடுத்தது.
இதனையடுத்து ஹைதரபாத் அணி 127 ரன்களை விரட்டி வருகிறது.