கொரியா ஓபன் பேட்மிண்டனில் பி.வி.சிந்து, சமீர் வர்மா ஆகியோர் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.
கொரியா ஓபன் பேட்மிண்டன் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் நடந்த இரண்டாவது சுற்றுப் போட்டியில் பி.வி.சிந்து, தாய்லாந்தின் நிட்சான் ஜிண்டபோல் உடன் பலப்பரீட்சை நடத்தினார். 42 நிமிடங்கள் நடந்த போட்டியில் 22-20, 21-17 என்ற செட் கணக்கில் சிந்து வெற்றியை வசமாக்கினார்.
ஆடவர் பிரிவில் இந்தியாவின் சமீர் வர்மா, 21-19, 21-13 என்ற நேர் செட்களில் ஹாங்காங் வீரர் வாங் வின்சென்டை தோற்கடித்தார். காலிறுதியில் முதல் நிலை வீரரான சன் வான் ஹூ உடன் பலப்பரீட்சை நடத்துகிறார். சன் வான் ஹூ இரண்டாவது சுற்றில் பாருப்பள்ளி காஷ்யப்-யை 21-16, 17-21, 21-16 என்ற செட் கணக்கில் போராடி வென்றார்.