விளையாட்டு

தோல்வியிலிருந்து மீளப்போவது யார்? - ராஜஸ்தானுக்கு எதிராக கொல்கத்தா முதலில் பேட்டிங்

தோல்வியிலிருந்து மீளப்போவது யார்? - ராஜஸ்தானுக்கு எதிராக கொல்கத்தா முதலில் பேட்டிங்

Sinekadhara

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவின் இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. மும்பை வான்கடே மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்கு இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சுஞ்சு சாம்சன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனால், கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்கிறது.

சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணியும், மோர்கன் தலைமையிலான கொல்கத்தா அணியும் நடப்பு சீசனில் தலா 4 போட்டிகளில் களமிறங்கி ஒரு வெற்றியை மட்டுமே வசப்படுத்தியுள்ளன. வெற்றிப் பாதைக்கு திரும்பும் வேட்கையில் இரு அணிகளும் இன்றைய ஆட்டத்தில் களம் காண்கின்றன. இவ்விரு அணிகளும் இதுவரை 23 முறை நேருக்கு நேர் களம் கண்டுள்ளன. அவற்றில் கொல்கத்தா 12 முறையும், ராஜஸ்தான் 10 முறையும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டியில் முடிவு ஏதும் எட்டப்படவில்லை.