விளையாட்டு

கோலியின் ஆக்ரோஷம் ரிச்சர்ட்சை ஞாபகப்படுத்துகிறது: அரவிந்த சில்வா வியப்பு

கோலியின் ஆக்ரோஷம் ரிச்சர்ட்சை ஞாபகப்படுத்துகிறது: அரவிந்த சில்வா வியப்பு

webteam

கோலியின் ஆக்ரோஷமான ஆட்டம் மேற்கிந்திய தீவுகளின் முன்னாள் வீரர் விவியன் ரிச்சர்ட்சை ஞாபகப்படுத்துகிறது என்று இலங்கை அணியின் முன்னாள் வீரர் அரவிந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறும்போது, ‘இந்திய கிரிக்கெட்டின் வண்ணத்தை மாற்றியவர்கள் சுனில் கவாஸ்கர், கபில் தேவ், சச்சின் டெண்டுல்கர். ஆனால் கோலி இந்திய கிரிக்கெட் அணியை வேறு லெவலுக்கு கொண்டு சென்றிருக்கிறார். அவர் அணியை வழி நடத்தும் விதம், அவரது நம்பிக்கை, ஆக்ரோஷம் ஆகியவற்றைப் பார்க்கும்போது, எனக்கு முன்னாள் ஜாம்பவான் விவியன் ரிச்சர்ட்சை ஞாபகப்படுத்துகிறது. டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி தோல்வி அடைந்திருப்பது வருத்தமாக இருக்கிறது. அணி வெற்றிபெற விரைவில் ஒரு திட்டத்தை முறைப்படுத்த வேண்டியது அவசியம் என கருதுகிறேன். அது நீண்ட கால திட்டமாக இருக்க வேண்டும். சில சிறப்பான பந்துவீச்சாளர்களை உருவாக்குவதும் அவசியம்’ என்றார்.